இலங்கையில் வாகன விலையில் புதிய மாற்றம்
வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) தொடர்பாக புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) வாகனத்தின் அடிப்படை பெறுமதியுடன் சேர்க்கப்படுவதால், மேலதிகமாக 18% VAT விதிக்கப்படும் சூழல் உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நடைமுறை: மொத்த வருமானத்தின் 50% அடிப்படையில் 1.25% SSCL மட்டுமே அறவிடப்படுகிறது.
புதிய முறை: 100% விற்றுமுதல் அடிப்படையில் முழுமையான 2.5% SSCL அறவிடப்படும்.
மாற்றம் அமலுக்கு வரும் தேதி: 2026 ஏப்ரல் 1 முதல் இறக்குமதி நிலையிலேயே அறவிடப்படும்.
இதன் நோக்கம்: ஒருமுறை மட்டுமே வாகனத்தை இறக்குமதி செய்யும் தனிநபர்கள் வரியைத் தவிர்ப்பதைத் தடுக்கும்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் Anil Jayantha கூறியதாவது:
புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படவில்லை
SSCL அறவிடும் இடமே மாற்றப்பட்டது
சமூக அச்சத்தை ஏற்படுத்தும் செய்திகள் தவறானது
வாகன இறக்குமதி, விற்பனை விலை மற்றும் VAT குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
.jpeg)