Posts

Showing posts from February, 2026

வாழ்க்கை தத்துவம் (பகுதி 02)

Image
 மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை சில மறதிகள் போதுமானது மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை சில மறதிகள் போதுமானது கடிக்கும் மிருகங்களோடு வாழ்ந்து விடலாம் நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது நோயின்றி வாழ வேண்டுமென்று நினையுங்கள் அடுத்தவரை நோகடித்து வாழ வேண்டுமென்று நினைக்காதீர்கள்

வாழ்க்கை தத்துவம் (பகுதி 01)

Image
நோயின்றி வாழ வேண்டுமென்று நினையுங்கள் அடுத்தவரை நோகடித்து வாழ வேண்டுமென்று நினைக்காதீர்கள் எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும் எல்லாம் உள்ள போது நீ நடந்து கொள்ளும் முறையும் தான் உன் வெற்றியை தீர்மானிக்கிறது உங்க குழந்தைகளை நல்லா வளர்த்து இருக்கிறீங்க இந்த வார்த்தையை விட மிகப் பெரிய விருது ஒன்றை உங்களால் அம்மாவிற்கு வாங்கி கொடுக்க முடியாது வாழ்வின் யதார்த்தம் இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்கு விரும்புகிறோம் இருக்கும் போது நமக்கு வேண்டியவர்களையும் பார்க்க மறுக்கிறோம் தேவைகள் மட்டும் இல்லையேல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசவே யோசிப்பார்கள் கடிக்கும் மிருகங்களோடு வாழ்ந்து விடலாம் நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது

ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 05)

Image
  ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 05) தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use). இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம். Tell me என்னிடம் சொல் Usually எப்பொதும் போல் Anything to drink ஏதாவது குடிப்பதற்கு இருக்கிறதா Leave it அதை விட்டு விடு You're right நீ சரியாக கூறினாய் Good afternoon மதிய வணக்கம் Yesterday morning நேற்று காலை Take this money இந்த பணத்தை எடுத்து கொள் Hello, reception வணக்கம், வரவேற்பரை Good cook நல்ல சமையல் Very dangerous மிகவும் ஆபத்தானது My goodness நல்ல வேளையாக (அ) என் நல்ல நேரம் No problem பிரச்சனை இல்லை

ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 04)

Image
ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 04) தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use). இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம். Read and write எழுத மற்றும் படிக்க What happened actually? உண்மையில் என்ன நடந்தது? Last night நேற்று இரவு My daughter என் மகள் Never mind கவலை படாதே Open the door கதவை திற I will try நான் முயற்சி செய்கிறேன் I can't என்னால் முடியாது Next station அடுத்த நிலையம் Not at all இல்லவே இல்லை (அ) இல்லை Thanks a lot மிகுந்த நன்றி Very old மிகவும் பழையது Something urgent ஏதாவது அவசரம்

ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 03)

Image
  ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 03) தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use). இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம். It tastes fine அது சுவை நன்றாக உள்ளது No, he didn't இல்லை, அவன் செய்ய வில்லை That's true அது உண்மை   I'm first in the class நான் வகுப்பில் முதல் மாணவன் I scored 98 in maths நான் கணிதத்தில் 98 பெற்றேன் My God! என் கடவுளே What a surprise என்ன ஓர் ஆச்சிரியம் What a shame என்ன ஓர் அவமானம் They are unlucky அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் I lost my purse நான் என்னுடைய பணப்பையை தொலைத்து விட்டேன் Just now சிறிது நேரத்திற்கு முன்பு (அ) இப்பொழுதுதான் Nothing ஒன்றுமில்லை

ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 02)

Image
ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 02) தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use). இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம். Yes, I think ஆமாம். நான் நினைக்கிறேன் Yes, I'll have some ஆமாம். என்னிடம் சில உள்ளது Well நல்லது Just one ஒன்றே ஒன்று Some more கொஞ்சம் அதிகமாக A good idea நல்ல யோசனை Just imagine கொஞ்சம் கற்பனை செய்து பார் Just fancy கொஞ்சம் ஆடம்பரமான I appreciate கொஞ்சம் ஆடம்பரமான Yes, of course ஆமாம் நிச்சயமாக Yes, certainly ஆமாம் உண்மையாக Ok, I will do சரி. நான் செய்வேன் It's pleasure அது சந்தோஷம் Just forget about it அதை பற்றி மறந்து விடு  They smell good அதன் வாசனை நன்றாக உள்ளது

ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 01)

Image
 ஆங்கிலத்தில் பேசுவோம்  (பகுதி 01) தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use). இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம். Hurry up சீக்கிரமாக Do something ஏதாவது செய் Moveback பின்னே செல் Good idea நல்ல யோசனை Let's go நாம் போகலாம் Come on let's go வா. நாம் போகலாம் Rush hour/peak hour பரபரப்பான நேரம் /உச்ச கட்ட வேலை நேரம் I'll bring it now நாம் இப்பொழது கொண்டு வருகிறேன் I've got fever எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது Enjoy yourselves நீ சந்தோஷமாக இரு No, thanks வேண்டாம். நன்றி No, I don't drink வேண்டாம். நாம் குடிக்க மாட்டேன் Don't worry கவலை படாதே Yes, please ஆமாம், தயவு செய்து Yes, don't mind ஆமாம். அதை நினைக்காதே (அ) கருதாதே

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு அறிவிப்பு

Image
இலங்கையில் ETA (மின்னணு பயண அங்கீகாரம்) சேவையில் தற்காலிக இடையூறு பிரித்தானியாவில் உள்ள Sri Lanka High Commission அறிவித்ததாவது, இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் வழங்கப்படும் ETA ஒப்புதல்கள் தற்காலிக இடையூறு நிலைமையை எதிர்கொண்டுள்ளது. காரணம்: எதிர்பாராத தொழில்நுட்ப சூழ்நிலை; இலங்கையில் உள்ள அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் இதனை பரிசீலித்து வருகிறார்கள். ETA அங்கீகாரம் பெறாத பயணிகளும் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்கள் தங்கள் பயணத்தைத் தொடரலாம். விமான சேவைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ETA அங்கீகாரம் இல்லாமலும் பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெற்றுள்ளனர். இலங்கையில் Bandaranaike International Airport வந்ததும் ETA சரிபார்ப்பு மற்றும் தேவையான வசதிகள் வழங்கப்படும். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சாதாரண சேவைகளை விரைவில் மீண்டும் நிலைநிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மற்றும் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வாகன விலையில் புதிய மாற்றம்

Image
வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) தொடர்பாக புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) வாகனத்தின் அடிப்படை பெறுமதியுடன் சேர்க்கப்படுவதால், மேலதிகமாக 18% VAT விதிக்கப்படும் சூழல் உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நடைமுறை: மொத்த வருமானத்தின் 50% அடிப்படையில் 1.25% SSCL மட்டுமே அறவிடப்படுகிறது. புதிய முறை: 100% விற்றுமுதல் அடிப்படையில் முழுமையான 2.5% SSCL அறவிடப்படும். மாற்றம் அமலுக்கு வரும் தேதி: 2026 ஏப்ரல் 1 முதல் இறக்குமதி நிலையிலேயே அறவிடப்படும். இதன் நோக்கம்: ஒருமுறை மட்டுமே வாகனத்தை இறக்குமதி செய்யும் தனிநபர்கள் வரியைத் தவிர்ப்பதைத் தடுக்கும். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் Anil Jayantha கூறியதாவது: புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படவில்லை SSCL அறவிடும் இடமே மாற்றப்பட்டது சமூக அச்சத்தை ஏற்படுத்தும் செய்திகள் தவறானது வாகன இறக்குமதி, விற்பனை விலை மற்றும் VAT குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்ப...

இலங்கையில் அறிமுகமாகும் டிஜிட்டல் நோமாட் விசா (DNV)

Image
வெளிநாட்டு நிபுணர்களுக்காக புதிய டிஜிட்டல் நோமாட் விசா (DNV) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக Department of Immigration and Emigration அறிவித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொலைதூர வேலைகளுக்கான சர்வதேச மையமாக இலங்கையை உருவாக்கவும் இந்த திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும், தங்களின் வாழ்க்கைத்துணை மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் சேர்ந்து இந்த விசா பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். எனினும், விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிபவராகவோ அல்லது அந்நாட்டிற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட தனது சொந்த வணிகத்தை நடத்துபவராகவோ இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதன்மை விண்ணப்பதாரர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 2,000 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நாணயமாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட சார்ந்திருப்பவர்கள் இருந்தால், ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் மாதத்திற்கு 500 அமெரிக்க டொலர்கள் கூடுதலாக அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பொலிஸ் அனுமதி அறிக்க...

இலங்கையில் காணி மற்றும் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

Image
இலங்கையில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளது. இதனை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் T. B. Sarath தெரிவித்துள்ளார். சொத்து சந்தையில் நிலவும் விலை மாபியாக்களை ஒடுக்கவும், காணி மற்றும் வீட்டுத் திட்டங்களின் விலைகளை கண்காணிக்கவும் ஒரு புதிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் காணி அமைச்சு மற்றும் Urban Development Authority உடன் இணைந்து முன்னெடுக்கப்பட உள்ளன. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு இணங்க, நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைத்தன்மைக்காக காணி மற்றும் வீட்டு விலைகளை கட்டுப்படுத்தும் சட்ட ரீதியான அமைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் Eranga Gunasekara, முறையான ஒழுங்குமுறை இல்லாததனால் சொத்துகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனை ஒரு மாபியா செயல்பாடாகக் கருதலாம் என்றும் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக...

கொழும்பில் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை

Image
  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்ட அறிவிப்பின்படி, அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Moratuwa, Rawathawatta, Soysa Pura, Ratmalana, Dehiwala, Mount Lavinia, Wellawatte, Pamankada, Mulleriyawa மற்றும் Kolonnawa உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், Battaramulla பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (19) காலை 6 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Image
நாட்டின் நிலவும் வானிலை நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்று (17) பதிவான தரவுகளின்படி, நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 128.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 13.4°C நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய கடலோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறை...

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

Image
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருவதன் தாக்கம் இலங்கை சந்தையிலும் தெளிவாகப் பதிவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்க விலையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (18) மீண்டும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்க விலை நிலவரம் ஒரு கிராம் தங்கத்தின் விலை: 24 கரட் – ரூ. 49,000 22 கரட் – ரூ. 44,940 21 கரட் – ரூ. 42,880 ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை: 24 கரட் – ரூ. 392,000 22 கரட் – ரூ. 359,520 உலக சந்தை நிலவரங்களின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களிலும் தங்க விலையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.